நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 170 ஆவது படத்தில் நடிக்கிறார். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அமிதாப்பச்சன், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ்த் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த், ''த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் லைக்காவின் 'தலைவர் 170' படத்தில் அமிதாப்பச்சன் உடன் 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியாற்றுகிறேன்.

என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார். ரஜினியும் அமிதாப்பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். 

அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'டான்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து ரஜினி 'பில்லா' என நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வசூலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan with actor Rajini Viral photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->