ஓ மை காட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வரும்.. ஆலியா மானஸா.?! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி நிறைய ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதன் பின்னர், இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரமாக நடிகை காவியா அறிவுமணி நடித்துவருகிறார். இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கின்ற ஹீரோயின் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அடுத்ததாக ஆலியா மானசா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அதில் ரியா நடித்து வரும் நிலையில் மீண்டும் அந்த சீரியலில் ஆலியா மானசா நடிக்கப்போவதில்லை என்று அவரே தெரிவித்திருந்தார். 

எனவே அவர் அடுத்ததாக எந்த சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவிய அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து விலகுவதாகவும் அந்த கதாபாத்திரத்தை ஆலியா மானஸா ரிப்ளேஸ் செய்ய இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alya manasa replaced pandiyan Stores mullai character


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->