அந்த விஷயத்தில்.. தளபதி விஜயை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.!  - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கான அடுத்த கட்ட ஷெட்யூல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தளபதி விஜய் மீது அவரது ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். தளபதியும் அவரது ரசிகர்களின் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்.இதுவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில்  தனது கணக்கை துவங்கி ஆக்டிவாகயிருந்து வருகிறார் அவரது ரசிகர்களும் உற்சாகமாக அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து அவர் "ஹாய் நண்பா, நன்பீஸ்,"! என கமெண்ட் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும்  வைரலாக்கி வருகின்றனர். 

எப்போதும் தனிமையே விரும்பும் விஜய் சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருப்பது  திரை துறையினருக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராம் தனது புகைப்படத்தை பதிவேற்றி 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குளை பெற்றிருந்த நிலையில், தளபதி விஜய் 104 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allu Arjun beats thalapathy vijay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->