சீரியல் நடிகைக்கு பலத்த அடி.. எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை.. ரசிகர்கள் பதற்றம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசாவிற்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது

ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை தான் ஆலியா மானசா. இவர் தனுடன் நடித்த சஞ்சீவினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தைக்கு பின்னர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார்.

ஆனால், இரண்டாவது கர்ப்பத்திற்கு பின் அவரால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. எனவே, சீரியலில் இருந்து விலகிய அவர் தனது இரண்டாவது குழந்தைக்கு பின் சன் டிவிக்கு மாறிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் இனியா சீரியலில் தற்போது அவர் நடித்து வருகின்றார்.

இத்தகைய நிலையில், கபடி போட்டியில் அவர் விளையாடிய போது காலில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டு எலும்பு முறிந்துள்ளது. இது பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டு சன் டிவி உங்களுக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் ஆலியா மானசாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aliya manasa Getting accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->