சினிமாவில் 18 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகை தமன்னா.. நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பழமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு இந்திய சினிமாவில் பிரபல நடிகையானார். தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை தமன்னாவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து பருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனிடையே நடிகை தமன்னா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் திரைத்துறையில் 18 ஆண்டுகள் நிறைவு செய்யததை தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'திரைத்துறையில் 18 ஆண்டுகளாக இருந்து வருவது எனக்கு மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். ரசிகர்கள் என்மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள்.

இது ஆரம்பம்தான். இனி ஒவ்வொரு நாளும் இன்னும் கற்றுக்கொண்டே இருப்பேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress thamanna complete 18 years in cinema industry


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->