காதலில் விழுந்தாரா நடிகை தமன்னா? அவரே அளித்த விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பழமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு இந்திய சினிமாவில் பிரபல நடிகையானார். தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை தமன்னாவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து பருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனிடையே நடிகை தமன்னா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுகள் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகை தமன்னா இது குறித்து அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Tamanna explained about love


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->