முதலில் கர்ப்பம்.. அப்புறம் தான் கல்யாணம்.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி நடித்த வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3 போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் பாலிவுட் பக்கம் சென்ற நடிகை டாப்ஸி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான சபாஷ் மிது திரைப்படம் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். அதன்படி ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நடிகை டாப்ஸி நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். டாப்ஸியின் இந்த பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Taapsee speech about marriage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->