இந்து கடவுளை அவமதித்த நடிகை டாப்ஸி.. பாஜக எம்எல்ஏ மகன் போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து இவர் வந்தான், வென்றான், காஞ்சனா 3 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்பொழுது வெப் தொடர்களில் பிசியாக இருக்கின்றார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியாக அரைகுறை ஆடை உடுத்தியுள்ளார். மேலும், கழுத்தில் இந்து கடவுளான மகாலட்சுமி அம்மன் உருவம் பொறித்த நெக்லஸ் அணிந்துள்ளார்.

தற்போது எந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்படி இந்து கடவுளை அவமதித்து விட்டதாக அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கூறி பாஜக எம்எல்ஏ மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Taapsee controversy necklace BJP MLA son complaint in police station


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->