41 வயதில் கர்ப்பமான கவர்ச்சி நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை மனதில் நிலையான இடத்தைப் பிடித்த இவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

அதை தொடர்ந்து இவர் விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிகை நமிதா கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடையை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். 

அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளை மட்டுமே தலை காட்டி வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமிதா, "தாய்மை..புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன் மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என்மீது பிரகாசிக்கும் போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியது எல்லாம் நீதான், உனக்காக எவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதவிகள் மற்றும் உன் படபடப்புகள் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீயே உருவாக்குகிறாய்" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress namitha get pregnant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->