அஜித் கையால் ஜோதிகாவுக்கு விருது.. நெகிழ வைத்த வரலாற்று சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வாலி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஜோதிகா. இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி, திருமலை, தூள், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். 

நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஜோதிகாவிற்கு தமிழில் மார்க்கெட் உயர்ந்தது என்று கூறலாம். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தது. 

கடந்த 2000-ம் ஆண்டில் பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் நடிகை என்ற விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை தல அஜித்குமார் தான் அவருக்கு வழங்கினார். 

அஜித்தின் வாலி படத்தின் மூலம் சினிமாவில் ஜோதிகா அறிமுகமானார். அவரது கையாயிலேயே முதல் பிலிம்பேர் விருதையும் பெற்றார் என்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி அடைய வைக்கும் தகவலாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress jyothika award from ajithkumar for vaali movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->