விஜய் படத்திற்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி.! - Seithipunal
Seithipunal


விஜய் படத்திற்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி.!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் லியோ. இந்தப் படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா படுத்து வருகிறார்.

மேலும், இந்த படத்தில், கெளதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஷெட்யூலை முடித்து விட்டு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இறுதிக் கட்டத்தை நெருங்கும் இந்த படப்பிடிப்பில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைகிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தான் ‘லியோ’ படத்தில் இல்லை என்ற தகவலை விஜய் சேதுபதியே உறுதிபடுத்தினார்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் நடித்து வரக்கூடிய பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathi voicing at liyo movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->