விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. இயக்குனர் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படத்திற்கு மகாராஜா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதியின் 50வது திரைப்படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மகாராஜா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள் தாஸ் மற்றும் பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜனீஸ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay sethupathi 50th movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->