இவர்தான் தளபதியின் பாட்டியா? புகைப்படத்தை வெளியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர். இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் கொண்டாடப்படவில்லை. 

அடுத்ததாக விஜய் வம்சி இயக்குகின்ற வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இதில் ராஷ்மிகா அவருடன் ஜோடியாக நடிக்கும் நிலையில், சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் பாட்டியுடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் வெளியிட்டு இருக்கிறார். 

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், "மதுரையில் இருக்கும் எனது சித்தி. அவரது வயது 103. இந்த வயதிலும் அழகாக அமர்ந்து கொண்டு என்னை ஆசீர்வதித்தார்." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay grandmother photo viral on instagram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->