"தர்ஷா குப்தாவால் தான் அப்டி பேசினேன்." நடிகர் சதீஷ் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஓ மை கோஸ்ட் இந்த படம் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதில் நடிகை தர்ஷா குப்தா, சன்னி லியோன், ரமேஷ் திலக் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியா வம்சாவளியான சன்னி லியோன் 2012 முதல் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தின் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின்  ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போது சன்னி லியோன் புடவை அணிந்து கொண்டு இருந்தார். ஆனால், தமிழ் நடிகையான தர்ஷா குப்தா லெகங்கா அணிந்திருந்தார். 

இதை நடிகர் சதீஷ் சுட்டிக்காட்டி எங்கிருந்தோ வந்தவர் கலாச்சாரத்தை காப்பாற்றுகிறார். ஆனால் நம்மூர் பொண்ணு இப்படி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரிடமும் கண்டனத்தை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஆடை கலாச்சாரம் குறித்து பேசியதற்கு பதில் அளித்துள்ளார். அதில், "சன்னி லியோன் விழாவிற்கு பட்டுப் புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா மிகவும் அப்செட் ஆனார் என்றும், இதை மேடையில் பேசலாம் என்று தர்ஷா குப்தா அனுமதி கொடுத்ததால் தான் பேசினேன் என்றும், ஆடை கலாச்சாரத்தில் ஆண் பெண் இருவருக்கும் அவரவருடைய விருப்பம் என்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sathish explain dharsa Gupta dress controversy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->