"பேட் டச்!" பெண்குழந்தைகளின் பெற்றோருக்காக பிரபுதேவாவின், 'பொய்க்கால் குதிரை'.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் பிரபுதேவா. அவரது நடனம் பலரிடமும் பாராட்டுதலைப் பெற்றது. 

மேலும் சில ரசிகர்கள் இவரை இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று கூட அழைப்பார்கள்.கடந்த 1989ஆம் ஆண்டு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய படங்களில் பிரபுதேவா நடித்துள்ளார். 

தற்போது, பிரபுதேவா நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் உருவாகி வருகிறது.இதனைத் தொடர்ந்து ரேக்லா, யுங் மங் சங், ஊமை விழிகள், பொய்க்கால் குதிரை, பகீரா, முசாசி உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன. 

இவரது பொய்க்கால் குதிரை திரைப்படத்தை சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்க இதனை S.வினோத் குமார் தயாரிக்கிறார். டி இமான் இசை அமைக்கும் இந்த படத்தில் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இதில் மிரட்டும் வில்லியாக வரலட்சுமி நடித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் பெண் குழந்தைக்கு தந்தையாக பிரபுதேவா நடிப்பதைப் போல காட்டப் பட்டிருக்கும் நிலையில் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor prabhudeva poikkalkuthirai trailer


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->