அந்த நடிகையையும் விட்டு வைக்கலயா பிரபு.?! காதல் வலையில் வீழ்ந்த நடிகைகள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான பிரபு 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். அந்தக் காலகட்டங்களில் இவர்  பல நடிகைகளை காதல் வலையில் வீழ்தியதாக செய்திகள் வந்தன. அந்த நடிகைகள் யார் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

குஷ்பூ :

பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியான சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் தவிர வெற்றிவிழா உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் பிரபுவுடன் குஷ்பூ நடித்து வந்தார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் சில காரணங்களால் இவர்களது காதல் கைகூடாமல் போனது என்றும் செய்திகள் தெரிவித்தது.

ஸ்ரீபிரியா:

80-களில் கனவுக்கன்னி  இவர்தான். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆட்டுக்கார அலமேலு, பில்லா, பொல்லாதவன் போன்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். இவர் பிரபுவுடன் சங்கிலி என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது, இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அம்பிகா: 

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த அம்பிகா. இவர், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் பிரபுவுடன் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த இவர் மீது பிரபுவுக்கு காதல் பார்வை திரும்பியிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அம்பிகா அவரது தந்தையுடனும் கதாநாயகி நடித்திருந்ததால் இவர்களது காதல் திருமணம் வரை செல்லவில்லை.

ரேவதி:

மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. இவர் பிரபுவுடன் இணைந்து நடித்த அரங்கேற்ற வேலை என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சினிமாவில் வெற்றி ஜோடியாக திகழ்ந்த இந்த ஜோடிக்கு  இடையே நல்ல புரிதல் இருந்திருக்கிறது. அதன் காரணமாக பிரபுவிற்கு இவர் மீது ஒரு காதல் இருந்துள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

கனகா: 

வாரிசு நடிகையான கனகாவிற்கும் வாரிசு நடிகரான பிரபுவிற்குமிடையே காதல் மலர்ந்து இருக்கிறது. இவர் பிரபுவிற்கு ஜோடியாக நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது கண்ணழகில் மயங்கி பிரபு இவரை காதலித்து வந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prabhu and his never ending love stories in kollywood


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->