நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.?! ரசிகர்கள் ஆச்சர்யம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் தீராத விளையாட்டுப் பிள்ளையாய் சுற்றி திரிந்த நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆர்யா-சாயிஷா தம்பதியினருக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிகர் சூர்யாவின் காப்பான் திரை படத்தில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி திரைப்படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை அடுத்து நடிகர் ஆர்யா தற்போது டெடி திரைப்பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், இந்த படத்திற்கு கேப்டன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என  கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Arya assets value


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->