வேற லெவல் | மாருதி சுசுகியின் புதிய ஸ்விப்ட் S-CNG.!  - Seithipunal
Seithipunal


மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதிய ஸ்விப்ட் S-CNG மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 
ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதனை மாருதி சுசுகி சப்ஸ்கிரைப் முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ. 16 ஆயிரத்து 499 ஆகும். 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

• மாருதி சுசுகி ஸ்விப்ட் S-CNG மாடலில் 1.2L K சீரிஸ் டூயல் ஜெட் மற்றும் டூயல் VVT என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர் மற்றும் 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

• மேலும், இந்த புதிய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த கார் கிலோவுக்கு 30.90 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

• இதன் டூயல் இண்டிபெண்டண்ட் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்கள் மற்றும் இண்டெலிஜண்ட் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் பாதுகாப்பிற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• இது CNG-ஐ சுற்றி எவ்வித சேதமும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maruti Suzukis New Swift S CNG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->