அறிமுகமாகியது மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல்.! - Seithipunal
Seithipunal



மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஸ்கார்பியோ கிளாசிக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய மாடல் வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த கார் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

• இதில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

• இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. 

• இத்துடன் ஃபாக் லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. 

• 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் டோன் லுக் அழகாக காட்சியளிக்கின்றன. 

• இதன் பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்-கள் நீண்ட இடைவெளிக்குப் பின் பொருத்தப்பட்டுள்ளது. 

• இதன் பக்கவாட்டு கதவுகளில் கிளாசிக் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. 

• மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை ஜென் 2 எம் ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

• இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த காரில் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் மற்றும் 2 ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra Scorpio N Model Launched


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->