மீண்டும் புதிய பொலிவுடன் களமிறங்கியது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ஸ்கார்பியோ N மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்கார்பியோ கிளாசிக் பெயரில் அதன் பழைய மாடலை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது.

விலை விபரங்கள்:

• புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் S வேரியண்ட் விலை -ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

• புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் S11 வேரியண்ட் விலை -ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம் என எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த எஸ்யுவி மாடல் இந்தியாவில் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.  

• இதன் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் மற்றும் புதிய முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் எல்.இ.டி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டி.ஆர்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் 17 இன்ச் ரிடிசைன் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• இதன் பின்புறம் டவர் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் மற்றும் பக்கவாட்டில் கிளாசிக் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த கார் புதிய ஜென் 2 எம்ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

• மேலும், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

• பாதுகாப்புக்காக ஏ.பி.எஸ் மற்றும் 2 ஏர்பேக் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டுள்ளது. 

• புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் ரெட் ரேஜ், நபோலி பிளாக், சாட் சில்வர், பியல் வைட் மற்றும் கேலக்ஸி கிரே என 5 விதமான நிறங்களில் கிடைக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra Scorpio Classic is back with a new look


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->