#BREAKING || நாடு முழுவதும் வணிக சிலிண்டரின் விலை உயர்வு.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த 2 மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.171 குறைந்து, ரூ.2,021.50க்கு விற்கப்பட்டது. அதேபோன்று மே மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்து சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றதால் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் ஜூலை மாதம் பிறந்த முதல் நாளே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் அதிகரித்து ₹1945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial use gas cylinder price increased


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->