ஆடி கார் வாங்க இதான் சரியான நேரம் - முன்பதிவுக்கு எவ்வளுவு தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


ஆடி இந்திய நிறுவனம் அதன் கார் மாடல்களின் விலையை 2.4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடி நிறுவனம் அதன் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5, RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. 

மேலும், இ-டிரான் பிராண்டின் கீழ் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நிறுவனம் சமீபத்தில் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

ஆடி நிறுவனத்தின் Q5 கார் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த புதிய மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றி குறித்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

audi q5


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->