இன்று சென்னையில் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் உயர்ந்து 5243 ரூபாயகவும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 41944 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைந்து 5240 ரூபாயகவும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 41920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல், இன்று சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 70.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 70000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

03 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->