குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது இளம் தாயார் செய்த செயல்,வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


மெக்சிக்கோ நாட்டில் இளம் தாயார் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டு தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே அபூர்வமாக உள்ளது .மேலும் இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாசமாக பார்க்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் மெக்சிகோவில் ஒரு ஹோட்டலில் இளம் தாயார் ஒருவர்  தனது குழந்தைக்கு அமர்ந்தப்படி தாய்ப்பால் கொடுத்துள்ளார்.அப்பொழுது அந்த பெண் குழந்தையின் தலையால் தனது மார்பகத்தை மறைத்துக்கொண்டும் துணியால் தனது முகத்தையும் மூடிக்கொண்டார்.

 இந்த புகைப்படத்தை அந்த பெண்ணின் தோழி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
 “படத்தில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார் குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதைத்தான் அவளும் செய்துள்ளார்.” என கேலியாக  கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எந்தவித விவாதத்திற்கும் இடம் அளிக்காமல் தனது முகத்தை மூடிக்கொண்ட அந்த பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் .

English Summary

the mother covering face while breastfeeding the child


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal