நாசா காலண்டரில்.. தமிழக பெண்ணின் வரைபடம்.. தொடர்ச்சியாக சாதிக்கும் பழனி பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா ஒவ்வொரு வருடமும், இதன் சார்பாக காலண்டர் வெளியிடுவது வழக்கம். அதேபோலவே இந்த வருடத்திற்கான காலண்டரையும் நாசா வெளியிட்டுள்ளது. அந்த காலண்டரில் நம் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவியின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.

மாணவ, மாணவிகளின் கலை மற்றும் கற்பனை திறனை  ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும்  நாசா  அவற்றின் காலண்டரில்  உலகெங்கிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டு அவற்றில் இருந்து சிறந்த ஓவியங்களை  தேர்ந்தெடுத்து வெளியிடும்.

அதேபோல 2022-23 ஆம் ஆண்டிற்கான  போட்டிகளை  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நாசா. இதில் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட  நம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியைச் சார்ந்த தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி தித்திகாவின் ஓவியமும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதே பள்ளியைச் சார்ந்த மாணவிகளின் ஓவியம்  நாசாவின் காலண்டரில் தொடர்ச்சியாக இடம் பெறுவது  குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தை வரைந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil student art published in nasa yearly Callender 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->