கடும் குளிர் - 18 குழந்தைகள் பலி! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக  நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

பாகிஸ்தானில் இதுவரை 1062 பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் லஹோரைச் சேர்ந்தவர்கள் அதிகம் என அந்நாட்டு மருத்துவத்துறையின் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டு மருத்துவத்துறையின் தகவலின்படி, இந்த மாதத்தில் மட்டும் லஹோர் பகுதியில் 780 பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பஞ்சாப்பில் 4900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடும் குளிரால் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவதைத் தவிர்க்க பள்ளிகளுக்கு வரும் 31 வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிலை தான் இப்படி என்றால் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலைமை படுமோசமாக உள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் கடும் குளிர் நிமோனியாவால் 2300 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்புகளைச் நாடுகளின் பட்டியலிலும் ஆப்கானிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan pneumonia death 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->