பாகிஸ்தான் தேர்தல்: முன்னாள் அமைச்சருக்கு போட்டியிட தடை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி துணை தலைவருமாக உள்ளவர் ஷா மஹ்மூத் குரேஷி. 

இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தார். 

சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக ஷா மஹ்மூத் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஷா மஹ்மூத்க்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் ஷா மஹ்மூத்தை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்துள்ளது. 

வருகின்ற 8 ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஷா மஹ்மூத் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Ex minister banned contesting election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->