மூளை தின்னும் அமீபா: மேலும் ஒருவர் உயிரை பறித்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், காராச்சியில் மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக சிந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமீபாவால் கராச்சியில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த அமீபா உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குச் சென்று மூளை திசுக்களை அழித்து, மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்று நோய் ஏற்படுத்தி உயிரை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர், ''நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், இந்த அமீபா தாக்கம் அரிது என்றாலும் எளிதில் உயிரை பறிக்கக் கூடியது. இதனால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

மக்கள் சுத்தம் செய்யப்படாத குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம்'' என அறிவுறுத்தியுள்ளார். 

குறிப்பாக மக்கள் மூக்கிற்குள் தண்ணீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Brain eating amoeba person killed 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->