எல்லையில் அமெரிக்கா ஒரு இன்ச் முன்னேறினாலும் அணு குண்டை வீசுவோம் : வடகொரியா பகிரங்க மிரட்டல்..!! - Seithipunal
Seithipunal


வடகொரிய எல்லையில் அமெரிக்கா ஒரு இன்ச் முன்னேறினாலும், அணு குண்டை வீசுவோம் என்று அந்நாடு பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளை அச்சுருத்தும் வகையில், அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வருகிறது.

அதற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இதனை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து, நேற்று முன்தினம் ஐநாவில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் கூட்டத்தில் வடகொரிய தூதர் கிம் இன் ரியாங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 1970-ம் ஆண்டிலிருந்து வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத வகையில் எங்கள் நாட்டிற்கு அமெரிக்காவால் அணு ஆயுத அச்சுருத்தல் நிலவி வருகிறது. மறைமுகமாக எங்கள் நாட்டின் அதிபரை அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க ஒவ்வொரு ஆண்டும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை வைத்து போர் ஒத்திகை செய்து வருகிறது. அதனால், அணு ஆயுதம், ஹைட்ரஜன் குண்டு, ஏவுககணைகள் தயாரித்து வைத்துள்ளோம். அவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. எங்கள் நாட்டை பாதுகாப்பது எங்களது உரிமை. 

எங்கள் நாட்டு எல்லையில் ஒரு இன்ச் அமெரிக்கா முன்னேறினாலும், நாங்கள் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. எங்களால் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்க முடியும். இப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுத போர் மூள வாய்ப்புள்ளது என்று கூறினார்.

முன்னதாக வடகொரியா முதல் தாக்குதலை நடத்தும் வரை அமெரிக்கா தாக்குதலை ஆரம்பிக்காது என்று அந்நாடு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North korea warns to America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->