பொதுமக்களே எச்சரிக்கை.. வேகமாக பரவும் புதிய சக்தி வாய்ந்த கொரோனா வைரஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவில் 113 தனிப்பட்ட மாற்றங்களைக் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுளளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று 2 ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கியது. இந்த பெரும் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் 69.03 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. இதிலிருந்து தற்போது மீண்டுள்ள நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் என்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜதார்த்தாவில் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அந்த நோயாளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்த போது அந்த வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் சுமார் 37 வகை மாறுதல்கள் மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரதசத்தை அழிக்கும் சக்தியை கொண்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு பரவிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வெறும் 50 வகை தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கண்டறியப்பட்ட வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது பரவினாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இந்த வகை வைரஸ் தொற்றுகள் எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறைந்த நோய் எதிர்ப்பு திறன் உடைய உடல் அமைப்புகளை கொண்ட நபர்களை அடிக்கடி பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New virus spread in Indonesia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->