சூரியன் போன்றே பிறந்துள்ள "Baby Sun"! ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ள நாசா! - Seithipunal
Seithipunal


பிரபஞ்ச ரகசியத்தை அறிய கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. அப்போது முதல் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படம் பிடித்து அனுப்பி வருகிறது. 

தற்போது புதிய நட்சத்திரம் உருவாகியுள்ளதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறந்து சில ஆயிரம் ஆண்டுகளே ஆன இந்த நட்சத்திரம் அதிக நிறை கொண்டதாகவும், துருவ பகுதியில் இருந்து சூடான காற்றை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய புகைப்படத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து உள்ளனர். 

இந்த நட்சத்திரம் முழுமையாக உருவான பின் நமது சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நமது சூரியன் பிறக்கும் போதும்  எப்படி இருந்ததோ அதேபோன்று இந்த நட்சத்திரமும் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நட்சத்திரத்திற்கு "BABY SUN" என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பேபி சன் புகைப்படத்தை நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA announced baby star formed similar to Sun


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->