அறிய வகை மூலிகையை திருடிய கும்பல்.! பொதுமக்கள் ஒன்று சேர்ந்து செய்த காரியம்., விரைந்த அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கை மாகாணத்தில் இருக்கும் அரியவகை மூலிகைகளுள் ஒன்றாக கற்றாழை கருதப்படுகிறது. இந்த கற்றாழையானது அங்குள்ள வறண்ட பிரதேசங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த மூலிகையானது அறிய வகை மூலிகை என்பதால் இதனை பறிப்பதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்., யாழ்ப்பாணம் பொன்மலை பகுதியில் இருக்கும் கற்றாலைகளை பிடுங்கிய நபர்களை அங்கிருக்கும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை பிடித்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு விஷயம் குறித்து தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக அவர்களை கைது செய்தனர். மேலும்., அவர்கள் வைத்திருந்த கற்றாழை செடிகளை கைப்பற்றினர். 

இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மக்கள் தெரிவித்தாவது., இந்த அறிய வகை கற்றாழையானது இலங்கையில் அதிகளவு காணப்பட்டது. இதனை அங்குள்ள நிறுவனங்கள் அதிகளவில் திருடி சென்று உபயோகம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கற்றாழை செடிகளை பிடுங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது போன்று தொடர் சம்பவங்கள் அரங்கேறி கொண்டு வருகிறது., கடந்த வாரத்தில் கற்றாழை செடிகளை பிடுங்குவதாக தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை எச்சரித்து அனுப்பிய நிலையில்., தற்போது இந்த சம்பவமானது மீண்டும் நடைபெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mob stolen by a thief police arrest them


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->