முகநூல் லோகோவில் திடீர் மாற்றம்.! அதிர்ச்சியில் பயனாளர்கள்.! - Seithipunal
Seithipunal


முகநூல் லோகோவில் திடீர் மாற்றம்.! அதிர்ச்சியில் பயனாளர்கள்.!

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிச் சென்றது முதலே அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அதில் முக்கியமாக, ட்விட்டரின் தனி அடையாளமான நீலநிறப் பறவை மற்றும் ட்விட்டர் என்ற பெயரும் 'எக்ஸ்'  என்பதாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ட்விட்டர் வரிசையில் முகநூலும் தனது லோகோவில் நேற்றைய தினம் மாற்றம் செய்துள்ளது. ட்விட்டர் அளவுக்கு பெரும் மாற்றமாக அமையாது போயினும், ஃபேஸ்புக் பயனர்கள் மத்தியில் இது பேசுபொருளாகி இருக்கிறது.

ட்விட்டர் அளவுக்கு அளவுக்கு பெரிய மாற்றமாக இல்லாவிட்டாலும் மிகச்சிறிய மாற்றத்தை மெட்டா நிறுவனம் செய்துள்ளது. பேஸ்புக் என்பதன் ஆங்கில பதத்தின் முதல் எழுத்தில் சிறிய மாற்றத்தையும் பொலிவையும் கூட்டியிருக்கிறார்கள். 

அதாவது, நீலநிற வண்ணத்தின் மெருகை அதிகரித்து இருப்பதோடு, இருள் நிழல் பின்னால் படிவதையும் சற்றே பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த திடீர் மாற்றம் எதற்காக என்று பயனர்கள் யோசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metta company change facebook logo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->