கால்களை இழந்து காலி டின்களை பயன்படுத்தும் சிறுமி.,தனது ஆசை நிறைவேறுமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் பரிதாபம் .! - Seithipunal
Seithipunal


கால்களை இழந்த சிறுமி ஒருவர் காலி டின்களையே செயற்கைக் கால்களாக பயன்படுத்தி பள்ளிக்கு சென்று வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவை சேர்ந்த மயாமேரி என்ற  8 வயது அகதிச் சிறுமி அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு தனது இரண்டு கால்களையும் இழந்தார்.

மேலும்  மழை வந்தால் சேறும் சகதியுமாகிவிடும் ஒரு சிறிய கூடாரத்தில்தான் மாயா மேரியும் அவளது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்படும் அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு  செயற்கைக் கால்கள் வாங்குவது குறித்து நினைத்துக்கூட பார்க்க இயலாது.

இவ்வாறு செயற்கைக் கால்கள் வாங்க வசதியில்லாததால் மயாமேரியின் தந்தை டின்களைக் கொண்டு செயற்கைக் கால்களை தயார் செய்து கொடுத்தார். மேலும் அதை பயன்படுத்தி அந்த சிறுமி தினமும் 300  மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்கிறாள்.

சில நேரங்களில் களைத்துப் போகும்போது அவள் தனது கைகளைப் பயன்படுத்தி தவழ்ந்து செல்கிறாள்.ஆனால் அவளது கைகளிலும் பிரச்சினை உள்ளது.

மேலும் அந்த சிறுமிக்கு  இருக்கும் ஒரே ஆசை தனது தோழிகளுடன் நடப்பதும் விளையாடுவதும் தான்,எனவே யாராவது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவ மாட்டார்களா, மீண்டும் நடக்க முடியுமா என மயா மேரி  காத்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

little girl using empty tin as artificial leg


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->