#சிரியா : அமெரிக்கா ஹெலிகாப்டர் தாக்குதல் "ஐ.எஸ் அமைப்பின்" முக்கிய தலைவர் சுட்டுக்கொலை..! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடான சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆக்கிரமிப்பிற்கு பின் அமெரிக்க படைகளும், சிரியா படைகளும் இணைந்து பெரும்பாலான பகுதிகளை மீண்டும் ஐ எஸ். அமைப்பிடமிருந்து கைப்பற்றியுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக அமெரிக்கா ஆதரவு ராணுவ படைகள் சிரியாவில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் அப்துல்-ஹாடி மஹ்மூத் அல்-ஹாஜி அலி பதிந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர் மூலம் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த அல்-ஹாஜி அலி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவலில், கொல்லப்பட்ட பயங்கரவாத தலைவர் மத்திய ஐரோப்பா மற்றும் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், சிரியா ஆக்கிரமிப்பில் முக்கிய பங்காற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா படையினர் நடத்திய தாக்குதலில், மூத்த ஐ.எஸ். தலைவர் காலித் அய்த் அஹ்மத் அல்-ஜபூரி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is leader shot dead as US troops helicopter attack in syria


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->