தைவானை நொடிப்பொழுதில் உலுக்கிய நிலநடுக்கம்.! ரிக்டர் அளவுகோலில் பதிவான மதிப்பால் கலக்கத்தில் தஞ்சம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. ஆங்காங்கே நிலவும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்., ஏற்பட்ட வெப்பம்., மழை., பனிமழை., வறட்சி என்று பல்வேறு கட்ட பாதிப்புகளால் இயற்கையை நாம் அளித்ததன் விளைவாக இன்று நாம் அனுபவித்து கொண்டு., எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை அறிந்து வருகிறோம்.

உலகம் முழுவதும் ஏற்படும் ஏதேதோ மாற்றம் மற்றும் பாதிப்பில் ஒன்றாக நிலநடுக்கம் இருந்து வருகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதற்கு பின்னர் ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., அந்த நாட்டில் அதற்கு பின்னர் பல நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் ஆங்காங்கே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசிய நாடானது நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால் அதிகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்

இந்த நிலையில்., தைவான் நாட்டில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் திடீரென நிலநடுக்கமானது ஏற்பட்டது. தைவான் நாட்டின் தலைநகரான தைபே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் சுமார் 6.1 ஆக பதிவானதை அடுத்து மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். 

மேலும்., நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்க துவங்கியதை அடுத்து அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பயத்தில் உறைந்த மக்கள் செய்வதறியாது வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில்., இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Taiwan country have a massive earthquake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->