நான்கு வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று நாடு திரும்பியுள்ளார். வரும் ஜனவரியில் நடைபெறவிருக்கும் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களின் ஆதரவைப் பெற லண்டனில்இருந்து 4 ஆண்டுகள் நாடு கடத்தலை முடித்துக் கொண்டு பாக்கிஸ்தான் திரும்பியுள்ளார்.

பாக்கிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷெரீப் லாகூரில் நடைபெறும் பெரிய பேரணியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாக்கிஸ்தான் நிகழும் அரசியல் கொந்தளிப்பு மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடியானா சூழலில் அவர் பாக்கிஸ்தான் திரும்பியுள்ளார்.

துபாயில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ஷெரீப் "4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாகிஸ்தானுக்குச் செல்கிறேன். அல்லாஹ்வின் அருளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாகிஸ்தானின் நிலைமை மேம்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலை இரண்டும் சமீபத்திய ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. நான் முன்பு கூறியது போல், நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிடுகிறேன், எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former pm Nawaz Sharif returned to Pakistan after four years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->