ஒரு முட்டையின் விலை ரூ.32.40 - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் தற்போது முட்டையின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. 

அதாவது 30 டஜன் கொண்ட முட்டையின் விலை ரூ.10,500ல் இருந்து ரூ.12,500 ஆகவும், ஒரு டஜன் முட்டைகளை ரூ.360க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சில்லரை வியாபாரிகள்  ஒரு முட்டையின் விலை ரூ.32.40 வீதம், ஒரு டஜன் முட்டையை ரூ.389க்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த விலை உயர்வு தொடர்பாக கோழிப்பண்ணையாளர்கள் பேசுகையில், கோழி முட்டை சமீப நாட்களாக அதிகரித்து வருவதால், மக்கள் முட்டை வாங்கி சமைத்து சாப்பிட பயப்படுகிறார்கள். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளும் அதிகரித்து வருகின்றன' என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egg price increased in pakisthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->