பிலிப்பைன்ஸில் பெய்த கன மழையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இயற்கையின் கோரத் தாண்டவத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கனமழையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள லெய்டே உள்ளிட்ட மாகாணங்களிலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட மெகி புயல் காரணமாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அந்த நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 160 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

மேலும் நிலச் சரிவுகளில் மாயமான மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to landslides in philippines flood


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->