சீனா முன்னாள் பிரதமர் காலமானார்! - Seithipunal
Seithipunal


சீனா முன்னாள் பிரதமர் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக்களின் அரசியல் நிலை குழு உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான லீ கெகியாங் (வயது 68) ஷாங்காய் நகரில் இன்று அதிகாலை காலமானார். 

இவர் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார். பிரதமராக இருந்த காலத்தில் கடினமான தருணத்தில் ஒரு நவீன துறை சார்ந்த நபராக சக ஊழியர்களுடன் வலம்வந்தார். 

மேலும் இவர் சீர்திருத்த எண்ணம் கொண்ட ஒரு அதிகாரியாவார். இவர் பிரதமர் பொறுப்பில் இருந்து விடைபெறும்போது சுமார் 800 அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகளிடம், ''மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சொர்க்கம் பார்க்கிறது. வானம் தான் அவருடைய கண்கள்'' என தெரிவித்தார். 

கம்யூனிஸ்ட் கட்சியில் நாட்டிற்கு பங்களிக்கும் லட்சியத்துடன் சேர்ந்த இவர் ஆளும் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ள குழுவில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியேறி ஒரு வருடத்திற்குள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். 

இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China EX prime minister passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->