ஈரான் :: அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகை கைது.! - Seithipunal
Seithipunal


ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில் மாஷா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  

ஹிஜாப் எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் போராட்டத்தில் பாதுகாப்புபடை வீரரை கத்தியால் குத்தியதாக 2 நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் ஈரானை சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி, சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக நடிகை தாரனே அலிதூஸ்டி மீது குற்றம் சாட்டி, அவரை ஈரான் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A famous actress arrested for supported the protest against the government of Iran


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->