சிறையில் வெடித்த கலவரம்.! 20 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு இடையே திடீரென இன்று தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. கைதிகள் இந்த கலவரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயற்சி செய்தும் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு உயிரிழந்தனர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் சிறையில் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary

20 prisoners were killed from Tajikistan

செய்திகள்Seithipunal