இன்றைய வெப்பநிலையை அறிந்தால் அதிர்ச்சி அடைந்து போவீர்கள்!! வெளியான தகவல்கள்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் இன்றைய வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கிறது. 

சில நாட்களாகவே தமிழகத்தில், வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. மேலும், பல நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை விட, மிக அதிகமாக வெப்பநிலை பதிவாகிறது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில், அதிகப்படியாக அனல் காற்று வீசுகிறது.

சென்னை வானிலை மையம் மார்ச் 9 (நாளை) முதல், சில நாட்களுக்கு, வெயிலின் அளவு குறையும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. 

மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. கரூரில் 104, மதுரை தெற்கு, திருநெல்வேலி, திருச்சியில் 103, சேலத்தில் 102 மற்றும் தர்மபுரி, வேலூர், திருத்தணியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's weather report 09.03.2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->