இந்தியா விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனை.! விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு.!! கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


 

இந்த உலகின் எந்த இடத்தில் எப்பொழுது மழை பெய்யும்., அங்கு மழை பெய்வதர்க்கான சாதகமான சூழல்கள் உள்ளனவா? அதற்கான புயல் சாத்தியங்கள் இருக்கிறதா? என்ற தகவலை நமக்கு வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து வருகிறது. 

இத்துறையின் தொடர் மேம்பாட்டின் காரணமாக இடி மற்றும் மின்னல் தாக்குதல்களை முன்கூட்டியே உணரக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இயற்கை பேரிடர் மற்றும் அதனை முன்கூட்டியே அறிந்து கொள்வது குறித்த சர்வதே மாநாடானது மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது., இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை மையத்தின் இயக்குனர் கே.ஜே.ரமேஷ் இந்த தகவலை தெரிவித்தார். 

இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் இயற்கை பேரிடரில் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இயற்கையில் சில விஷயங்களை முன்கூட்டியே ஏற்படும் பிரச்சனைகளை கண்டுபிடிப்பது சாத்தியமான ஒன்றுதான். 

செயற்கை கோள்கள் மற்றும் ரேடார்கள் அனுப்பும் புகைப்படங்கள் மூலியமாக இடி மற்றும் மின்னல் தாக்குதல்களை முன்கூட்டியே அறியக்கூடிய வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக அதற்கான கருவிகளை உருவாக்கும் முயற்சியானது நடைபெற்று வருகிறது. 

இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்னல் அல்லது இடியின் தாக்கமானது அதிகமாக இருக்கும் என்று தெரியவரும் பட்சத்தில்., மக்களுக்கு முன்னறிவிப்பை அலைபேசியின் மூலமாக தகவல்கள் வழங்கப்படும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian weather report chief announced a good news


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->