பெற்றோர்களே உஷார்.! குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்,இணையத்தில் பரவுகிறது உயிரை பறிக்கும் புதிய ஆபத்து,எச்சரிக்கும் காவல்துறை .! - Seithipunal
Seithipunal


ப்ளூவேல் கேமை தொடர்ந்து  இளைஞர்களின் உயிரை பறிக்கும் அபாயகரமான ‘மோமோ’ சவால் தற்போது வைரலாகி வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவி அதன் அபாயகரமான சவாலால் பல இளைஞர்கள் பலியாகினர்.

மேலும்  இந்தியாவிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து, சமீபத்தில் கிகி என்ற சேலஞ்ச் டிரெண்டாகியது. ஓடும் காரில் இருந்து குதித்து பாடலுக்கு நடனம் ஆடும் இந்த சவாலால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என போலீசார் எச்சரித்தனர். 

இந்நிலையில் தற்போது, உயிரை குடிக்கும் அபாயகரமான  மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

            

மனநிலை பாதிக்கப்பட்ட ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை வைத்து உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு ஃபேஸ்புக் மற்றும்  வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலமே அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் ஒரு லிங்கில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு இருந்துள்ளது.

இந்த விளையாட்டில் மனநிலையை பாதிக்கும் வகையில் பல புகைப்படங்கள் பகிரப்பட்டு  அந்தரங்கம் தொடர்பான கேள்விகளை கேட்டு டாஸ்க் தொடங்கப்படுகிறது . 

    

மேலும் மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும்.இந்நிலையில்  மோமோ சவாலில் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக மிரட்டும் விதத்தில் செல்போனில்இருந்து திருடப்பட்ட  புகைப்படம்,வீடியோ போன்ற தகவல்களும், நம்மிடமிருந்து பெறப்பட்ட அந்தரங்க தகவல்களும் வெளியிடப்படும் என  மிரட்டல் விட படுகிறது.எனவே  குறிப்பிட்ட சவாலை ஏற்காதவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

இத்தகைய மோமோ எனும் மிக ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. 


இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் . இந்த விளையாட்டுக்கான லிங்க் வாட்ஸ் அப்பில் வந்தால் அதனை முயற்சி செய்ய வேண்டாம் என காவல்துறையினர் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் எச்சரித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

very danger momo challenge speread in the internet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->