காலங்காத்தாலேயே அடித்து நகர்த்திய இந்தியா.. இதனை சற்றும் எதிர்பாராத சீனா: நேரம் பார்த்து அலறவிட்ட நிகழ்வு..? - Seithipunal
Seithipunal


கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமைபெற்ற அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. 

அக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது.

அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்கும். ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரானபோர் மூளும் சூழல் ஏற்பட்டால்  இந்தியாவின் நம்பகமான தற்காப்ப்பு ஆயுதமாக இந்த ஏவுகணை உள்ளது.

இந்தியா, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிரானவை அல்ல என்றும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் சீனாவுக்கு எதிராக தான் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2012 அன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அக்னி-1 சோதனைக்குப் பிறகு, அதற்கு அடுத்து அந்த சோதனையின் ஒரு பகுதியாக அக்னி-2 ஏவுகணையை அதே 2012 அன்று சோதித்தது. மீண்டும்  2013ல் சோதித்து பார்த்தது.

இந்த நிலையில் தற்போது, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமைபெற்ற அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. 

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது.

இந்த திட்டத்தில் அக்னி 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளை மத்திய மந்திரிகள் மத்திய அரசு பாராட்டி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-Successfully-TestFires-Nuclear-Capable-Ballistic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->