இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதா..? நசுக்க பார்க்கும் தமிழக அரசு - நாசுக்காக தமிழக மக்கள் எடுத்த அசத்தல் முடிவு.! - Seithipunal
Seithipunal


ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ,தயாரிக்கவோ விற்கவோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை கடந்த புத்தாண்டு தினம் முதல் அமலுக்கு வந்தது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட நிலையில், இதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற விவரமும் வெளியிடப்பட்டது.

இதில் பாலிதீன் பைகளுக்கு பதிலாக துணி பையும், பல இடங்களில் பிளாஸ்டிக் ஐஸ் கிரீம் கப்புகளுக்கு பதிலாக சிறிய அளவிலான மண் செப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் இந்த விதிமுறைகளை மதித்து அதற்கு மாற்றாக பாரம்பரிய பொருட்களை உபயோகிக்க முயற்சி மேற்கொண்டு வரும்நிலையில், இன்னும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் பழைய நடைமுறையையே கையாண்டு வருகின்றன.

மக்காத பிளாஸ்டிக் கவர்களை எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்படும் நிலையில், காபி கப்பை சுற்றி, சீலிடப்பட்ட நிலையில் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். அரசின் விதிமுறை சாமானிய மக்களுக்கு தானா..? இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடையாத என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why plastic ban implemented like this peoples sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->