செட்டில் ஆன பிறகு திருமணம் என்று நினைக்கறீங்கலா..? சந்ததிக்கே ஆபத்துங்க.. பிரபல மருத்துவர் செல்லும் பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


மரபணு தொடர்பான கோளாறுகளும் கருத்தரிப்பின்மை அதிகரிக்க காரணங்களில் ஒன்று என்று டாக்டர். மனீஷ் பேங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசுகையில், இந்தியாவில் தற்போதுகருத்தரிப்பு இயலாமைக்கான சிகிச்சைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், கருத்தரிக்க இயலாதவர்களின் விகிதம் பெருமளவு அதிகரித்து வருவது, நம் நாடுசந்தித்து வரும் பெரும் சவாலாகும்.

போதிய விழிப்புணர்வு, மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும்கட்டுப்படியாகும் கட்டணம்போன்றவை கருவுறாமை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், சிகிச்சைகளைப் பெறவும் முக்கிய தடைகளாக உள்ளது என்றார்.

இந்தியாவில், 2கோடியே 70 லட்சம் முதல்3கோடி வரை தம்பதியினர் கருத்தரிக்கும் வயதுடையவர்களாக இருப்பினும், இயற்கையாகவே குழந்தையைச் சுமக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்என கணக்கிடப்பட்டிருக்கிறது.

கருவுறாமையால் பாதிக்கப்படும் தம்பதியினரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பரபரப்பான வாழ்வு முறை, மாறிவரும் உணவுப்பழக்கம், புற்றுநோய், நீரழிவு நோய் மற்றும் உடல்பருமன் போன்ற மருத்துவரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருவது இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இவை தவிர்த்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம், வயது கடந்து தாமதமாக செய்து கொள்ளும் திருமணம், புகைப்பிடித்தல் மற்றும் மரபணு தொடர்பான கோளாறுகள் போன்றவையும் இதர காரணங்கள் என்றார் அவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why baby born reduced in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->