திருச்சி, சிவகங்கை தொகுதிகளுக்கு ஏற்படும் நெருக்கடி!! ஏற்கனவே இந்த நெருக்கடிதான் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்தது!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் என 4 எம்.பி. தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டது. எம்.பி. தொகுதியை மீட்க புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இல்லாமல் தனி சாம்ராஜ்யம் நடத்தியது புதுக்கோட்டை சமஸ்தானம். புதுக்கோட்டையின் பெருமையை உலக மக்கள் அனைவரும் அறிவர்.

கடந்த  2009-ம் ஆண்டு தேர்தலின்போது, புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 49 ஓ வுக்கு வாக்களிக்கும்படி பிரசாரம் செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13 ஆயிரத்து 680 ஓட்டுகள் 49 ஓ வுக்கு கிடைத்தது.

அந்த வருடம் நடந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் சுமார் 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சாருபாலா தொண்டைமான் தோல்வியடைந்ததற்கு 49-ஓ விற்கு விழுந்த ஓட்டுகள் தான் காரணம் என கூறப்பட்டது.

இதேபோல் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொகுதி மீட்பு குழு சார்பில், நோட்டாவுக்கு ஓட்டு சேகரித்து தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 50,932 ஓட்டுகள் நோட்டாவுக்கு கிடைத்தன.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறங்க புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் போராடுவதற்கு முக்கிய காரணம், தனி நாடாளுமன்ற தொகுதிக்கான அனைத்து தகுதிகளும் புதுக்கோட்டைக்கு இருந்தும், தேர்தல் ஆணையத்தால் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் இன்னும் புதுக்கோட்டை மக்களிடம் இருந்துவருவதுதான் முக்கிய காரணம்.

6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் ஒரு எம்.பி. தொகுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால் எம்.பி. தொகுதி பறிபோய் விட்டது. இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ஒவ்வொரு வாக்காளர்களிடமும் உள்ளது என புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீட்பு குழுவினர் கூறுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy and sivagangai election tuff


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->