டிராக்டரை பைனான்ஸ் கம்பெனியினர் ஜப்தி செய்ததால் விவசாயி தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


கடலுார் மாவட்டம், காட்டு மன்னார் கோவிலை அடுத்துள்ள கருணாகரநல்லுாரைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 47). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், தங்கதுரை (வயது 23) என்ற மகனும், தனலட்சுமி (வயது 20) என்ற மகளும் உள்ளனர்.

இவர் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில்,  நிலக்கடலை, கத்திரிக்காய் மற்றும் கரும்பு பயிர் செய்து வந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது பழைய டிராக்டிரைக் கொடுத்து விட்டு, புதிதாக ஒரு டிராக்டரை வாங்கினார். அதற்காக, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், கடன் பெற்று, அந்த டிராக்டரை வாங்கினார்.

டிராக்டரின் ஆர்.சி. புத்தகத்தை, நிதி நிறுவனத்தார் வாங்கிக் கொண்டு, டிராக்டருக்கு ஈடாக, பணம் தந்ததாக, ஒப்பந்தம் இட்டு, அவருக்கு கடன் கொடுத்துள்ளனர்.

தவணை ஒன்றுக்கு, 90,000 வீதம் 8 தவணைகளில், பணத்தைச் செலுத்த, அந்த நிதி நிறுவனத்துடன் தமிழரசன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

அதன்படி, முதல் இரண்டு தவணைக்கான தொகையைச் சரியாகச் செலுத்தி விட்டார். மூன்றாவது தவணைத் தொகையில், 50,000 ரூபாய் செலுத்தி விட்டு, மீதம் உள்ள 40,000 ரூபாயை, கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள, தனது கரும்பிற்கான நிலுவைத் தொகை கிடைத்ததும், செலுத்துவதாகக் கூறி உள்ளார்.

ஆனால், அந்த நிதி நிறுவனமோ, இன்னும் 10 நாட்களுக்குள், பாக்கித் தவணைப் பணம் செலுத்தா விட்டால், டிராக்டரை ஜப்தி செய்து விடுவோம், என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி, அந்த நிதி நிறுவனம், தமிழரசன் வீட்டிற்கு வந்து, டிராக்டரை ஜப்தி செய்து சென்றது.

இதனால் மனம் உடைந்த தமிழரசன், தோட்டத்திற்கு வந்து, பயிருக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார். சிறிது நேரத்தில், அங்கேயே மயங்கி விழுந்து இறந்து போனார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tractor Accounting Company captured former sucide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->